இன்னமும் அந்த பழக்கம் போகல. பெட்ரூம்க்கே வந்துடுறான்.! மஹத் மனைவி ஓபன் டாக்.!  - Seithipunal
Seithipunal


அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற மங்காத்தா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் மகத். இதனை தொடர்ந்து ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் என்று சில படங்களில் நடித்திருந்தார். இருப்பினும், அவர் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று தான் அதிக அளவில் பிரபலமானார். மகத் அந்த நிகழ்ச்சியில் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

பிராச்சி மிஸ்ரா என்ற பெண்ணை மகத் காதலித்து வந்தார். இதனை தொடர்ந்து சமீபத்தில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் அனிருத், சிம்பு , பிரேம்ஜி என்று மகத்தின் நெருங்கிய நண்பர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர். இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் இருவரும் சேர்ந்து சேனல் ஒன்றிற்கு தற்போது பேட்டி கொடுத்து இருந்தனர். 

அப்பொழுது தங்களுடைய திருமண வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது பேசிய பிராச்சி, கோகோ என்ற பெயர் கொண்ட செல்ல நாய் ஒன்றை வளர்த்து வருகின்றோம். அது இரவில் நாங்கள் இருவரும் தூங்கும்போது எங்களுக்கு நடுவில் வந்து தான் கோகோ உறங்கும்.

நன்றாக நள்ளிரவில் தூங்கி கொண்டிருக்கும் பொழுது என் கன்னம் அருகே சூடான காற்று வரும். அது மஹத் தான் என்று நினைத்து விழித்து பார்ப்பேன். பின்னர், தான் தெரிந்தது, அது கோகோ என்று. திருமணத்திற்கு முன்பு கோகோவை கட்டிப்பிடித்து தான் தினம் தூங்குவேன். இப்போது திருமணம் ஆன பின்னும் கோகோ என்னைவிட்டு போகமாட்டேன் என்கிறான்" என்று கூறி சிரித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mahath wife open talk


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->