மகிழ்ச்சியில் ரசிகர்கள்... ''மெட்ராஸ்காரன்'' திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் அப்டேட்.! 
                                    
                                    
                                   Madraskaaran teaser release update
 
                                 
                               
                                
                                      
                                            
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கிஸ்மத் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஷேன் நிகாம். இதனை தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். 
இந்நிலையில் ஷேன் நிகாம் தற்போது ''மெட்ராஸ்காரன்'' என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தாத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 
சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை எஸ்.ஆர். ப்ரோடுக்ஷன் சார்பில் ஜெகதீஷ் தயாரித்துள்ளார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படத்தின் புரொடக்சன் பணிகளை தொடர்ந்து பட குழு மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருந்தது. 

இந்நிலையில் ''மெட்ராஸ்காரன்'' திரைப்படத்தின் டீசர் வெளியீடு குறித்து அப்டேட் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த திரைப்படத்தின் டீசர் வருகின்ற 24-ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 
இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த அறிவிப்பால் ரசிகர் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பிலும் உற்சாகத்திலும் உள்ளனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       Madraskaaran teaser release update