மீண்டும் ரீ ரிலீஸாகும் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி..! - Seithipunal
Seithipunal


கடந்த 2004ம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், அசின், நதியா, பிரகாஷ் ராஜ் மற்றும் விவேக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' திரைப்படம். இந்தப் படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. இந்தப் படத்தின் கதைக்களம் கணவனை பிரிந்து மகனை வளர்க்கும் தாயின் அன்பு, அவள் படும் கஷ்டங்கள், தாய்க்காக மகன் செய்யும் செயல்கள் என்று மிகவும் நேர்த்தியாக உருவாகியிருக்கும். 

அதிலும் குறிப்பாக ரவி மோகன் மற்றும் நதியாவின் ஒற்றுமை மிகவும் அழகாக இருக்கும். இந்த நிலையில் திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் முடிவடைந்த நிலையில் இந்தத் திரைப்படத்தை மீண்டும் வரும் 14ம் தேதி ரீ ரிலீஸ் செய்கின்றனர். 

இந்த அறிவிப்பின் மூலம், ரவி மோகன் ரசிகர்கள் மற்றும் திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படம் ரீ-ரிலீஸாவதையொட்டி இயக்குனர் மோகன் ராஜா தனது எக்ஸ் தளத்தில் போஸ்டர் வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

m kumaran son of mahalakshmi movie re release


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->