இனி இதை மட்டும் செய்யவே கூடாது... லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம்! 
                                    
                                    
                                   Lokesh Kanagaraj speech goes viral
 
                                 
                               
                                
                                      
                                            அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில் உறியடி விஜயகுமார் நடித்துள்ள திரைப்படம் 'ஃபைட் கிளப்'. இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தனது ஜி ஸ்குவாட் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். 
கடந்த இரண்டாம் தேதி இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆக்சன் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 
இந்த படத்தின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜயகுமார் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக இணைந்து பேட்டியளித்துள்ளனர். 

அப்போது பேசிய லோகேஷ், ''லியோ திரைப்படத்தின் இரண்டாம் பாதி குறித்து விமர்சனங்கள் எழுந்ததை ஏற்றுக்கொள்கிறேன். 
இது போல் இனி ஆகிவிடக் கூடாது என்பதால் வெளியீட்டு செய்தியை முடிவு செய்துவிட்டு படத்தை எடுக்கக் கூடாது என முடிவு செய்துள்ளேன். 
இறுதி நேர அழுத்தங்கள் இல்லாமல் கவனமாக இருக்க வேண்டும். இவ்வளவு வேகம் தேவையில்லை. நிதானம் தேவை என நினைக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       Lokesh Kanagaraj speech goes viral