பழம்பெரும் நடிகை புஷபலதா மறைவு; திரைப் பிரபலங்கள் இரங்கல்..! 
                                    
                                    
                                   legendary actress Pushpalatha passes away
 
                                 
                               
                                
                                      
                                            நடிகர் ஏ.வி.எம்.ராஜனின் மனைவியும் பழம்பெரும் நடிகையுமான புஷ்பலதா, வயது மூப்பு சார்ந்த உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார்.
தமிழ் சினிமாவில் 1960 மற்றும்70களில் கோலோச்சிய முக்கிய நடிகைகளில் ஒருவர் புஷ்பலதா. இவர் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ஜெமினி கணேசன் எனப் பல முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள மொழிகளிலும் கூட அவர் பல படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.
தமிழில் 1961-ஆம் ஆண்டு 'கொங்கு நாட்டு தங்கம்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், மற்றும் எஸ்.எஸ். ராஜேந்திரன் உள்ளிட்ட பலருடன் நடித்து புகழ் பெற்றவர்.

1963-ஆம் ஆண்டு 'மெயின் பி லட்கி ஹூன்' என்ற ஹிந்தி படத்தில் நடித்த புஷ்பலதா, 'நர்ஸ்' என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார். 'நானும் ஒரு பெண்' திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜனுடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலித்துப் பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.
அத்துடன், சிம்லா ஸ்பெஷல், சகலகலா வல்லவன், நான் அடிமை இல்லை போன்ற படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் புஷ்பலதா நடித்துள்ளார். அவரின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       legendary actress Pushpalatha passes away