வைரலாகும் லால் சலாம் படத்தின் முதல் பாடல்.! - Seithipunal
Seithipunal


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மேலும், இந்த படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இதற்கிடையே படக்குழுவினர் கடந்த 12-ம் தேதி  நடிகர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், இந்தப் படத்தின் முதல் பாடல் இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியாகும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

அதன்படி, லால் சலாம் படத்தின் "தேர் திருவிழா" என்ற தலைப்பு கொண்ட முதல் பாடலை லைகா நிறுவனம் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது. வெளியான சில மணி நேரத்திலேயே இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lal salam movie first song released


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->