ஸ்கூல் படிக்கும்போதே லவ்! இரவு போர்வைக்குள் நடந்த சம்பவம் - மனம்திறந்த லட்சுமி மேனன்! - Seithipunal
Seithipunal


பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமிமேனன். இதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் இவர், நடிகர் சசிகுமாருடன் சுந்தரபாண்டியன், குட்டிப்புலி ஆகிய இரண்டு படங்களில் நடித்தார்.

இதனை தொடர்ந்து, நடிகர் விஷாலுடன் பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். மேற்கொண்டு, றெக்க, மஞ்சப்பை, மிருதன், புலிக்குத்தி பாண்டி, கொம்பன், ஜிகர்தண்டா ஆகிய படங்களிலும் நடித்தார். மேலும், வேதாளம் படத்தில் நடிகர் அஜித்திற்கு தங்கையாக நடித்திருந்தார். 

2023-ல் வெளிவந்த சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தற்போது இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகயுள்ள சப்தம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

இந்த நிலையில், நடிகை லட்சுமிமேனன் தனது முதல் காதல் பற்றிய ரகசியங்களை தெரிவிக்கையில்,"என்னிடம் யாரும் என்னை காதலிப்பதாக சொல்லியதில்லை. ஆனால், நான் பள்ளி காலத்தில் எனக்கு பிடித்த ஒருவரிடம் என் காதலை சொன்னேன். அவரும் என் காதலுக்கு சம்மதம் தெரிவித்தார்.

இதன் பின்னர் நாங்கள் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்தோம். அம்மாவுக்கு தெரியாமல் இரவில் போர்வைக்குள் ஒளிந்து எல்லாம் போன் பேசி இருக்கிறேன்.

அந்த சமயத்தில் தான் எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதனால் என்னால் அந்த காதலை தொடர முடியவில்லை.

தற்போது அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. தொடர்ந்து பட வாய்ப்பு கிடைத்து வந்ததால் என்னுடைய படிப்பையும் தொடர முடியவில்லை. அதன் பின்னர் அவரிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. என்று நடிகர் லட்சுமி மேனன் தெரிவித்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lakshmi Menon School Love Story


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->