சிறுவனுக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய பண உதவி - kpy பாலாவிற்கு குவியும் பாராட்டு.! - Seithipunal
Seithipunal


கலக்கப்போவது யாரு நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான பாலா, தற்போது வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார். ஸ்டாண்ட் அப் காமெடியன், நடிகர் என்பதை தாண்டி தனது சமூகநல செயல்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அதாவது, குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது, போதிய மருத்துவ வசதி இல்லாத இடங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது என்று தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார். 

அதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் பாதிப்பு ஏற்பட்ட போது 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கினார். இப்படி பல உதவிகளை செய்து வரும் பாலா சமீபத்தில் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் இளைஞர் ஒருவருக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளார். 

 

பாலாவின் இந்த சேவையை பாராட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ், இனி அவர் செய்யும் அனைத்து நலத்திட்ட உதவியிலும் தனது பங்கு இருக்கும் என்று தெரிவித்து இருந்தார். அதன் படி இருவரும் இணைந்து கணவனை இழந்து 3 பெண் குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வரும் முருகம்மாள் என்ற பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்தனர். 

இந்த நிலையில் கண் பார்வை இழந்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய இருவரும் இணைந்து பண உதவி வழங்கி உள்ளனர். இதுகுறித்த வீடியோவை பாலா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலான நிலையில் இருவருக்கும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kpy bala and ragava lawrance money help to boy eye opperation


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->