காந்தாரா படத்தின் ''வராஹ ரூபம்'' பாடல் மீதான தடை நீக்கம்! - Seithipunal
Seithipunal


கன்னட மொழியில் உருவான காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. கர்நாடகாவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. ரிலீஸ் ஆன அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். காந்தாரா திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள வராஹ ரூபம் பாடல் மெகா ஹிட் ஆனது.

இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த தாய்குடம் பிரிட்ஜ் என்ற பிரபல இசை குழு உருவாக்கிய நவரசம் என்ற பாடலை தழுவி வராஹ ரூபம் பாடல் உருவாக்கியதாக குற்றம் சாட்டி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த அக்டோபர் 28ஆம் தேதி வராஹ ரூபம் பாடல் காந்தாரா படத்தில் இடம்பெற தற்காலிகமாக தடை விதித்தனர்.

தாய்குடம் பிரிட்ஜ் தொடர்ந்து வழக்கு இன்று கேரளா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது உயர் நீதிமன்றத்தின் வரம்புக்கு உட்பட்டது அல்ல என கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். மேலும் எர்ணாகுளத்தில் உள்ள கமர்சியல் நீதிமன்றத்தில் அடுத்த 15 நாட்களுக்குள் தாய்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவினர் முறையீடு செய்து கொள்ளலாம் என கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக தற்பொழுது வராஹ ரூபம் பாடல் மீதான தடை நீங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala High Court lifts ban on varaha Roopam song


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->