அடேங்கப்பா.. நயன்தாரா படத்தில் ஹீரோவாகும் கவின்.! நாளை வெளியாகப்போகும் அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனுடைய தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்த படம் உருவாக உள்ளது இது குறித்த அப்டேட் தற்போது வெளியாகியிருக்கிறது. 

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து உருவாக்கிய பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தற்போது நிறைய திரைப்படங்களை அவர்கள் தயாரித்து வருகின்றனர். தற்போது நயன்தாரா ,விஜய் சேதுபதி, சமந்தா நடிக்கும் காதல் திரை படத்தையும் தயாரித்து வருகின்றனர். 

அவரது தயாரிப்பில் உருவான கூழாங்கல் திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாக உள்ளது. 

இந்த படத்தின் அறிவிப்பு நாளை 10.08 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சரவணன் மீனாட்சி மற்றும் பிக்பாஸில் நடித்த கவின் கதாநாயகனாகவும், நடிகை வாணி போஜன் கதாநாயகியாகவும் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kavin in rowdy pictures production


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->