பாஸான போதும்.. கதிரிடம் டிப்ஸ் கேக்கும் சரஸ்வதி.! பெரிய மனுசங்க செய்ற வேலையா இது.?!  - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் படிக்காத தம்பியாக கதிர் கதாபாத்திரத்தில் குமரன் நடித்திருப்பார். மூன்று மாதங்களாக கஷ்டப்பட்டு படித்து அவர் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறுவதாக சீரியலில் காட்டப்பட்டிருக்கும். 

இதை குடும்பத்துடன் அவர்கள் கொண்டாடுவார்கள். இந்த விஷயம் நமது சோசியல் மீடியாக்களில் பரவி அனைவருக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தியது இதனை பலரும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். 

இந்த நிலையில்தான் தற்போது விஜய் டிவியில் தமிழும், சரஸ்வதியும் என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சரஸ்வதி கதாபாத்திரத்தில் நடிக்கும் நக்ஷத்திரா 8 ஆண்டுகளாக பன்னிரண்டாம் வகுப்பு பாஸ் செய்ய கஷ்டப்பட்டு வருகின்றார். இதற்காக அவர் கோவில்களில் ஏறி இறங்கி வழிபடுகிறார். 

இந்த இரண்டு சீரியல்களையும் கவனித்த விஜய் டிவி ரசிகர்கள் மூன்று மாதங்களில் படித்து பாஸான கதிரிடம் எட்டு வருடங்களாக போராடும் நக்ஷத்திரா டிப்ஸ் கேட்கலாமே என்று கூறினர். 

இதை கண்ட கதிர் நட்சத்திராவை டேக் செய்து இருந்தார்/ இதனை தொடர்ந்து நச்சத்திரா தனக்கு பன்னிரண்டாம் வகுப்பு பாஸ் செய்ய டிப்ஸ் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்/ இவர்கள் இருவரும் டேக் செய்து ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கிண்டல் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kathir tips to sarasvathy


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->