பெரும் சாதனை புரிந்த "கண்டா வரச்சொல்லுங்க' பாடல்.! இத்தனை மில்லியன் பார்வையாளர்களா.!? - Seithipunal
Seithipunal


இயக்குனர் மாரிசெல்வராஜ் கர்ணன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் யோகிபாபு மற்றும் சிலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். 

வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் கண்டா வரச்சொல்லுங்க பாடல் வெளியாகியது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்த பாடல் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருந்தது.

பாடல் வரிகளை மாரி செல்வராஜ் எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் மற்றும் கிடக்குழி மாரியம்மாள் இருவரும் இந்த, :கண்டா வரச்சொல்லுங்க" பாடலை பாடியுள்ளனர். சமீபத்தில் வெளியான இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

இத்தகைய சூழலில், இந்த பாடல் பல்வேறு தரப்பினரும் விரும்பும் விதமாக இருப்பதால், ரசிகர்கள் அனைவரும் தங்களது தலைவர்கள், பிடித்த கிரிக்கெட் வீரர்கள், பிடித்த நடிகர்களுக்கு பொருத்தி பார்த்து ஆனந்தம் அடைகின்றனர். அந்த வகையில், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி, மகேந்திர சிங் தோனி, நடிகர்கள் ரஜினி, அஜித் மற்றும் விஜய் ஆகியோருக்கு எடிட் செய்து வீடியோ வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். 

கிரியேட்டிவிட்டியுடனும், வித்தியாசமான முயற்சியினாலும் இது ரசிகர்களை பெருமளவு கவர்ந்துள்ளது. தற்போது இந்த பாடல் யூடியூபில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanda vara sollunga songs upon 6m views on Youtube


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal