கமல் பட நாயகியாகும் நயன்தாரா... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
Kamal Manirathinam new movie nayanthara may be joint the movie
இந்திய திரையுலகில், கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றிக்கு பிறகு, விக்ரம் படம் கமலுக்கு பிரமாண்ட வெற்றியை கொடுத்துள்ளது.
சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைய இருப்பது, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“நாயகனை மிஞ்சும் ஒரு படத்தில்தான் நாங்கள் இணைய இவ்வளவு ஆண்டுகள் காத்திருந்தோம்” என்று, இந்த படம் குறித்து கமல்ஹாசன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இப்படத்தின் first look போஸ்டருக்கான படப்பிடிப்பு நடந்து முடிந்து உள்ளதாகவும், கமலின் பிறந்தநாளான நவ.7இல் படத்திற்கான ஓரு அறிமுக விடியோவினை படக்குழு வெளியிட உள்ளதாகவும் ஒரு உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், கமலின் 234வது படத்தின் நாயகியாக நடிக்க, நடிகை நயன் தாராவிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Kamal Manirathinam new movie nayanthara may be joint the movie