ஊர் ஊராக சுத்தினீர்களே.. எல்லாம் பிம்பிலிகா பிளாப்பி தானா?.. கமல் ஆவேசம்.!! - Seithipunal
Seithipunal


நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், " இந்திய ராணுவத்தின் வீரத்தையும், தீரத்தையும் நன்கு அறிந்தவர்கள் நாங்கள். ஆனால் அவர்கள் உயிரை வைத்து நீங்கள் அரசியல் விளையாடாமல் பாதுகாக்கவே இந்த கேள்வியை நான் கேட்கிறேன். 

1.இதுவரை இந்திய பிரதமர் எவரும் செல்லாத அளவிற்கு அதிக முறை சீனாவிற்கு சென்ற வந்தீர்களே, அப்படியிருந்தும் இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க உங்களால் ஏன் முடியவில்லை? 

2.கடந்த ஆண்டு சீன அதிபரை இந்தியாவிற்கு வரவழைத்து, நட்புறவை வளர்க்க பேச்சுவார்த்தை நடத்தினார்களே அதுவும் உதவவில்லை.. 

3.நட்புறவை வளர்க்க எல்லா நாடுகளும் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும், உங்களது முயற்சி தோல்வி தானா? என்று கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும், பேச்சுவார்த்தை மூலமாகவோ அல்லது நட்புறவு மூலமாக நீங்கள் செய்ய வேண்டியதைத்தான் இந்திய ராணுவத்தில் வீரர்கள் உயிரை தியாகம் செய்து செய்து கொண்டிருக்கின்றனர். 

அவர்கள் உயிரை பாதுகாக்க நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்கிறேன். அதே நேரத்தில் நடந்த உண்மை நிகழ்வுகளை பரபரப்பு மிகுந்த இந்த நேரத்தில் பகிர்ந்துகொள்வது, மக்களிடையே தேவையற்ற வதந்திகள் பரவுவதை தடுக்கும். அரசு தயார் நிலையில் இருப்பதை எடுத்துரைக்கும். வரி செலுத்தும் குடிமகனாக இதனை கேட்பதற்கு அனைவருக்குமே உரிமை உள்ளது. 

ராணுவத்தை நம்புங்கள் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் போன்ற பொறுப்பிலிருந்து நழுவும் பதில்கள் இல்லாமல், ஒரு மிகப்பெரிய தேசத்தின் பிரதமராக உங்கள் பொறுப்பை உணர்ந்து இந்த சூழ்நிலையை சமாளிக்க என்ன செய்யப் போகிறீர்கள்? என்று சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kamal Hassan Raise question to Modi about India Safety


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->