ரங்கராஜ் பெயரோடு...மகனின் பர்த் சர்டிபிகேட்டை வெளியிட்டு மாதம்பட்டியை வெறுப்பேற்றும் ஜாய் கிரிசில்டா! - Seithipunal
Seithipunal


சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜின் தனிப்பட்ட வாழ்க்கை மீண்டும் சர்ச்சையில் மாட்டியுள்ளது. அவரின் இரண்டாவது மனைவியான ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, சமீபத்தில் ஆண் குழந்தைக்கு தாயான நிலையில், தற்போது தன்னுடைய குழந்தையின் பிறப்புச் சான்றிதழை (Birth Certificate) வெளியிட்டுள்ளார்.

தளபதி விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கும், பல பிரபல நடிகைகளுக்கும் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தவர் ஜாய் கிரிசில்டா. மிகவும் பிஸியான ஸ்டைலிஸ்டாக இருந்தபோதும், இயக்குநர் ஜே. ஜே. பிரெட்ரிக்குடன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடுகள் காரணமாக, 2023-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

அதன்பின் தாயாருடன் வாழ்ந்து வந்த ஜாய், மாதம்பட்டி ரங்கராஜின் நிகழ்ச்சிக்காக ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற தொடங்கினார். இதன் மூலம் இருவருக்கும் நெருக்கம் அதிகரித்து, காதல் உறவாக மாறியது. ரங்கராஜ், தன்னுடைய முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெறும் நிலையில் இருப்பதாக கூறியதால், ஜாய் அவரை நம்பி உறவில் ஈடுபட்டார்.

ஆனால் ஜாய் கூறியதன்படி, தாம் கர்ப்பமாகிய பின்னர் ரங்கராஜ் உறவை மறுத்ததோடு, குழந்தையை கலைக்க வற்புறுத்தியதாகவும், உடல் வன்முறையிலும் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டினார். இதையடுத்து ஜாய், குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், மாதந்தோறும் ரூ.6.5 லட்சம் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அந்த வழக்கைத் தொடர்ந்து சில நாட்களில், ஜாய் ஆண் குழந்தைக்கு தாயானார். இதுகுறித்த தகவலை புகைப்படம் மூலம் வெளியிட்டிருந்த அவர், தற்போது குழந்தையின் பிறப்புச் சான்றிதழையும் வெளியிட்டுள்ளார். அதில் குழந்தையின் பெயர் ‘ராகாராஜ் தங்கவேல்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. தந்தை பெயராக மாதம்பட்டி ரங்கராஜ், வயது 43 என்றும் தொழில் ‘செஃப்’ என்றும் பதிவாகியுள்ளது.

மேலும், தன்னுடைய குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்த ஜாய், அதில் ரங்கராஜை டேக் செய்துள்ளார். இதனால் சமூக வலைதளங்களில் அந்த பதிவு வேகமாக வைரலாகி வருகிறது.

திரையுலகத்திலும், தொலைக்காட்சி ரசிகர்களிடையிலும் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா விவகாரம் மீண்டும் பேசப்படும் தலைப்பாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Joy Crisilda angers Madhampatti by releasing her son birth certificate with Rangaraj name


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...


செய்திகள்



Seithipunal
--> -->