நாளை ஜெய்பீம் படத்தின் ட்ரெயிலர்.! பரபரப்புக்கு தயாராகிடுங்க..! - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் நவம்பர் 2ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது. நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு சூர்யாவின் பிறந்த நாள் அன்று வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் தலைப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தலைப்பு வைரலாகிய நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

இந்த படத்திற்கு எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.மேலும், ஒரு தகவலாக நடிகர் அருண் விஜய்யின் மகன் இந்தப் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி யூடியூப் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்னில் இருந்தது. அடுத்ததாக படத்தின் முதல் பாடலும் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், நாளை ஜெய்பீம் படத்தின் ட்ரெயிலர் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jaybhim trailer announcement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->