ஜவான் படத்துக்கு ஆஸ்கர்? இயக்குநர் அட்லீயின் அசத்தலான பகிர்வு!  - Seithipunal
Seithipunal


ஷாருக்கான் நடிப்பில் உருவான 'ஜவான்' படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப விருப்பம் என இயக்குனர் அட்லீ தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்துள்ள நேர்காணலில் 'ஜவான்' படத்தை ஆஸ்காருக்கு கொண்டு செல்வீர்களா என கேட்டதற்கு, இயக்குனர் அட்லீ 'கண்டிப்பாக. 

எல்லாம் சரியாக நடந்தால் ஜவான் படம் ஆஸ்கருக்கு போகலாம். சீமாவில் பணியாற்றும் டெக்னீசியன், இயக்குனர் என ஒவ்வொருவருக்கும் ஆஸ்கர், தேசிய விருது போன்றவற்றின் மீது விருப்பம் இருக்கும் என நினைக்கிறேன். 

அந்த வகையில் எனக்கும் 'ஜவான்' படத்தை ஆக்கருக்கு கொண்டு செல்ல ஆசை இருக்கிறது. இது குறித்து ஷாருக்கான் இடம் கேட்கப் போகிறேன்' என தெரிவித்துள்ளார். 

இதற்கு முன்னதாக இயக்குனர் அட்லீ, ஷாருக்கானும் விஜயும் இணைந்து நடிக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்திருந்தார். 'ஜவான்' திரைப்படம் வெளியாகி 11 நாட்களில் ரூ. 858. 68 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jawan movie for Oscar Director Atlee sharing


கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?
Seithipunal