இந்திய சினிமாவில் முதன்முறை வரலாற்று சாதனை படைத்த 'ஜவான்'!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் அட்லி, ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தின் மூலம் இந்தியில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

இந்த திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 4500 தியேட்டர்களில் வெளியானது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான இந்த படம் கலவையான விமர்சனங்களை கொண்டு வசூலை குவித்தது. 

உலக அளவில் முதல் நாளில் ரூ. 129. 6 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் உலகம் முழுவதும் 30 வது நாளில் இந்த திரைப்படம் ரூ. 1103.27 கோடி வசூலித்துள்ளதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர். 

முதல்முறையாக இந்திய சினிமா வரலாற்றில் இந்தி திரைப்படம் இவ்வளவு வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அமீர்கானின் 'தங்கல்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 2024 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. ஷாருக்கானின் முந்தைய திரைப்படமான 'பதான்' 1050.30 கோடி வசூலித்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jawan first historical achievement Indian cinema


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->