பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ்நடிகை, ஆதரவு அளித்து ஐஸ்வர்யா ராய் எடுத்த அதிரடி முடிவு, ஆடிப்போன திரையுலகம்.!
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ்நடிகை, ஆதரவு அளித்து ஐஸ்வர்யா ராய் எடுத்த அதிரடி முடிவு, ஆடிப்போன திரையுலகம்.!
நடிகை ஐஸ்வர்யா ராய் பாலியல் தொல்லை கொடுத்த இயக்குனருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது இயக்கத்தில் தான் நடிக்கவிருந்த படத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் கஜேந்திரா, குசேலன், குஸ்தி, கனகவேல் காக்க போன்ற சில படங்களில் நடித்த நடிகை புளோரா சைனி.இவர் ஹிந்தி,தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் ஹிந்தி தயாரிப்பாளர் கவுரங் தோஷி என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தன்னை தாக்கி தாடையை உடைத்ததாகவும் சமீபத்தில் பரபரப்பு புகாரை தெரிவித்தார்.மேலும் அப்பொழுது காயத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். தயாரிப்பாளர் கவுரங் தோஷி, தீவார், ஆங்கென் உட்பட சில படங்களைத் தயாரித்துள்ளார்.
மேலும் புளோரா அப்பொழுது தனக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் தவிர வேறு எவரும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் கவுரங் தோஷி எனக்கு செய்த கொடுமையை பார்த்து ஐஸ்வர்யா ராய் எனக்கு ஆதரவு தெரிவித்து அவர் கோபம் அடைந்தார். அதை தொடர்ந்து, பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தாக்கும் நபரின் படத்தில் நடிக்க முடியாது என்று கூறி கவுரங் தயாரிக்க இருந்த படத்தில் இருந்து ஐஸ்வர்யா வெளியேறினார் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் இதுகுறித்து கூறுகையில், ‘இந்த பிரச்சனை குறித்து நான் ஏற்கனவே பேசியிருக்கிறேன், பேசுகிறேன், இனியும் தொடர்ந்து பேசுவேன்.
சமூக வலைதளங்கள் மூலம் பெண்களின் குரல் பலருக்கும் கேட்கிறது. Me Too இயக்கம் தான் தற்போது தேவை. இது வலுப்பெறும் என்று நம்புகிறேன்’ என ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.
English Summary
ishwarya supprt actress flora saini for affecting sex abuse