Va Varalam Va | முதல் நாளிலேயே வசூலில் அசரவைத்த வா வரலாம் வா.!! - Seithipunal
Seithipunal


எஸ்.ஜி.எஸ் கிரியேட்டிவ் மீடியா சார்பில் எஸ்.பி.ஆர் தயாரிப்பில் கடந்த டிசம்பர் 1ம் தேதி வெளியான நகைச்சுவை கலந்த  திரில்லர் திரைப்படமான "வா வரலம் வா" பாக்ஸ் ஆபிஸில் ஒரு நல்ல தொடக்கத்தை தந்துள்ளது.  

தேனிசைத்தென்றல் தேவா இசையில் இடம் பெற்றுள்ள  4 பாடல்களும் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக கண்ணெதிரே தோன்றினாள் படத்தின் "சல்லோமியா", காதல் கோட்டை படத்தின் "கவலைப்படாதே சகோதரா" போன்ற பாடலுக்கு இணையாக இந்த படத்தில் "கானா எட்வின்" வரிகளில் "ஜில்லுஜில்லுனு" என்ற பாடல் தற்போதுவரை ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

நகைச்சுவை மற்றும் திரில்லர் என தனித்துவமான கலவையாக உருவாகியுள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலாஜி முருகதாஸ், மஹானா சஞ்சீவி, சிங்கம்புலி, சரவண சுப்பையா, ரெடின் கிங்ஸ்லி, காயத்திரி ரெமா, தீபா, வையாபுரி, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் 40 குழந்தைகளும் நடித்திருப்பது வா வரலாம் வா படத்திற்கு கூடுதல் பலம்.

வா வரலாம் வா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான மற்றும் தனித்துவமான கலவையான பாராட்டுகளை பெற்று வருவதால் வரும் நாட்களில் படம் பார்க்க ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

info va varalam va movie 1st day box office collection


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->