11 நாளில் இத்தனை கோடி தான் வசூலா? - அதிர்ச்சி கொடுத்த இந்தியன் 2 .!
indian 2 movie collection
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் இந்தியன் 2. கடந்த 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், இந்த எதிர்ப்பார்ப்பை இந்தியன் படம் பூர்த்தி செய்யவில்லை என்பதே மக்களுடைய கருத்தாக உள்ளது. இந்தியன் 2 திரைப்படம் கடந்த 11 நாட்களாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் செய்துள்ள வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, தமிழ்நாட்டில் இதுவரைக்கும் மட்டும் 11 நாளில் ரூ. 51.75 கோடி வரை வசூல் செய்துள்ளது. ஆனால், இந்த படத்தின் ஏதிர்பார்பை பார்க்கும்போது இந்த வசூல் இந்தப் படத்துக்கு கிடைத்துள்ள குறைவான வசூலாகாவே பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், இந்தப்படம் உலகம் முழுவதும் எந்த அளவிற்கு வசூல் செய்யும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். படக்குழு எதிர்பார்த்த அளவிற்கு இந்த படம் வசூலாகுமா? என்பது தெரியவில்லை.
English Summary
indian 2 movie collection