இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்திற்கு இவர்தான் காரணம்.? தலைமறைவு.. போலீசார் தேடுதல் வேட்டை.!! - Seithipunal
Seithipunal


இந்தியன் 2 படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்கும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த பூந்தமல்லியில் ஈவிபி சினிமா படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த படப்பிடிப்பூக்கள் செட் அமைக்கும் பனியின் போது, கிரேன் அறுந்து விழுந்ததில் 3 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த விபத்திற்கு  கிரேன் ஆபரேட் செய்த ராஜன் என்பவர் தான் கரணம் எனவும், அவர் மீது தவறான முறையில் வாகனத்தை கையாண்டதற்காக, அஜாக்கிரதையாக இருந்ததற்காக போன்ற 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தற்போது அந்த கிரேன் ஆபரேட்டர் ராஜன் தலைமறைவாகிவிட்டதாகவும், அவரை காவல் துறையினர் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

indian 2 movie accident case


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->