''இந்தியன் 2'' திரைப்படத்தின் 2 வது பாடல் குறித்த அப்டேட்! வைரலாகும் போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் ''இந்தியன்''. இந்த திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இதனை தொடர்ந்து ''இந்தியன் 2'' திரைப்படத்தை இயக்குனர் சங்கர் தற்போது இயங்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததை தொடர்ந்து வருகின்ற ஜூன் 1ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. 

இதில் ரஜினிகாந்த், ராம்சரண், இயக்குனர் மணிரத்தினம், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி உள்ளிட பலர் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

இந்நிலையில் இரண்டாவது பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்ட அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும் இந்த பாடலின் ப்ரோமோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் எனவும் இந்தியன் 2 திரைப்படம் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian 2 2nd song release update


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->