கருக்கலைப்பு, தற்கொலை முயற்சி.. காதல் தோல்வி.! விட்டுடுங்க, ரொம்ப பட்டுட்டேன்.. கதறும் இலியானா.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் கேடி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் இலியானா. இவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானார். மேலும் தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.

இலியானாவும் ஆஸ்திரேலியாவை சார்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நீபோனும் காதலித்தனர். அவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை இலியானா அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தி வந்தார். இதன் காரணமாக ரகசிய திருமணம் நடந்து விட்டதாகவும் கிசுகிசுத்தனர். ஆனால், சமீபத்தில் இலியானாவுக்கும், அவருடைய காதலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கூறப்பட்டது.

எவ்வுளவு துன்பங்களை அனுபவித்தேன் தெரியுமா?.. இலியானா திடீர் பேட்டி..  கண்ணீருடன் ரசிகர்கள்.!! - Seithipunal

இந்நிலையில் இலியானா கர்ப்பமாக இருந்தார் என்றும், கருக்கலைப்பு செய்தார் என்றும், காதல் தோல்வியால் மன உளைச்சலில் தற்கொலை செய்ய முயற்சியில் ஈடுபட்டார் என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வந்தது.

 இந்த வதந்திக்கு இலியானா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "நான் கர்ப்பமாக இருந்தேன். கருக்கலைப்பு செய்தேன் என வெளியான தகவல்கள் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. நான் தற்கொலைக்கு முயன்று பிறகு உயிர்பிழைத்ததாக எனது வேலைக்காரி சொன்னார் என்றும் தகவல் வெளியானது. எனக்கு வேலைக்காரியே இல்லை. நான் தற்கொலைக்கு முயற்சி செய்யவும் இல்லை. இப்போது உயிருடன்தான் இருக்கிறேன்" என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

iliyana sadly speech about her life


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->