எவ்வுளவு துன்பங்களை அனுபவித்தேன் தெரியுமா?.. இலியானா திடீர் பேட்டி.. கண்ணீருடன் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகையாக இருந்தவர் இலியானா. இவர் தமிழ் திரைஉலகில் கடந்த 2006 ஆம் வருடத்தில் வெளியான கேடி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகினர்.

இதனையடுத்து தமிழ் திரையுலகில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் திரைப்படத்தில் தோற்றமளித்து., தனது அழகான இடுப்பின் அழகால் கோடான கோடி உள்ளங்களை கவர்ந்து சென்றார். 

இதற்குப்பின்னர் தனது திரைப்பட வாய்பினை பாலிவுட் திரையுலகில் தேட துவங்கிய நிலையில்., தற்போது பாலிவுட் நடிகையாக இருந்து வருகிறார். இப்போது மொத்தமாக தென்னிந்திய திரைப்படங்களுக்கு விடுப்பு அளித்துள்ளார். 

இதுமட்டுமல்லாது ஆன்ரியு நிப்போன் என்ற புகைப்பட கலைஞருடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் பிசியாக இருந்த நிலையில்., கருத்து வேறுபாட்டின் காரணமாகி பிரிந்துள்ளததாக தெரிகிறது. 

View this post on Instagram

📸 @kadamajay

A post shared by Ileana D'Cruz (@ileana_official) on

தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இலியானா., " எனது தேவை இல்லை என்று ஆன பின்னர்., இதனை பற்றி பேசுவது தேவையில்லாதது. இதனை நல்ல ஒரு அனுபவமாக எடுத்து கொள்கிறேன். கடந்த வருடத்தில் உடல்நலக்குறைவால் சிகிச்சையில் இருந்தேன். 

உடலுக்கு ஓய்வு மற்றும் 12 மாத்திரைகள் என இருந்ததால் உடல் குண்டாகிவிட்டது. இதனை குறைக்க ஜிம்மிற்கு சென்ற என்னை புகைப்படம் எடுத்து பதிவிட்டதால்., நான் தற்போது ஜிமிற்கு போகவில்லை என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ileana speech about her love and weight failure


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->