இயக்குனராக அவதாரம் எடுக்கபோகும் விஜய்சேதுபதி! ரசிகர்கள் மகிழ்ச்சி!! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் சேதுபதி திரைப்படம் இயக்க ஆர்வம் உள்ளதாகவும் விரைவில் திரைப்பட இயக்க செய்வேன் எனக் கூறியுள்ள செய்தி விஜய் சேதுபதி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக் குழு போன்ற திரைப்படங்களில் சிறு தோற்றத்தில் நடித்து பின்னர் முழு நீள படத்தில் ஹீரோவாக நடிக்க தொடங்கிய விஜய் சேதுபதி தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததார். அதன் பின்னர், மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாகவும், ரஜினியின் பேட்டை படத்தை ரஜினிக்கு வில்லனாகவும் நடித்து தமிழ் சினிமாவில் வில்லனாகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் விஜய் சேதுபதி.

 நடிகர் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படம் மகாராஜா இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் இயக்கியுள்ளார். இந்த நிலையில் விஜய் சேதுபதி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், மகாராஜா எனக்கு 50ஆவது திரைப்படமாக அமைந்தது மகிழ்ச்சி. சினிமாவில் எல்லோரிடமும் இருந்து ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

விமர்சனங்கள் பாராட்டுகளை சமமாக பார்க்கிறேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்னாள் துபாயில் வேலை செய்தேன். பல வருடங்களுக்குப் பிறகு துபாயில் பூஜ் கலிப்பாவில் என் படத்தின் போஸ்டர் வந்தபோது ஜெயிக்க வேண்டும் என்று துபாய் தெருக்களிக் சுற்றியதுதான் நினைவுக்கு வந்தது. நிறைய படங்களில் நடித்த பிறகும் ஒரு நடிகனாக எனக்கு நிறைவு ஏற்படவில்லை. 

என்னை மக்கள் செல்வன் என்று அழைக்கும் போது கேட்க நன்றாக இருக்கிறது. 50 படங்களில் நடித்துவிட்டேன். பல படங்களுக்கு எனக்கு முழுமையான சம்பளம் இன்னும் வரவில்லை காசலை கூட பணம் இன்றி திரும்பி வந்திருக்கிறது. ஆனாலும் தயாரிப்பாளர்கள் படம் எடுக்க முன்வருவதை நான் வரவேற்கிறேன். எனக்கு படம் இயக்க ஆர்வமாக இருக்கிறது விரைவில் படம் இயக்குவேன் என்று கூறிவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I want to direct a movie soon by Vijay Sethupathi


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->