மிமிக்ரி செய்வதால் என் குரலையே இழந்து, மேடை நிகழ்ச்சிகளில் பேசவே சிரமப்படுகிறேன்; நடிகர் மணிகண்டன் வருத்தம்..! 
                                    
                                    
                                   I find it difficult to speak in my own voice on stage due to mimicry Due to this I am losing my voice Actor Manikandan is sad
 
                                 
                               
                                
                                      
                                            தமிழ் திரையிலகில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் மணிகண்டனும் ஒருவர். இவர் 'காலா', 'ஜெய்பீம்', 'சில்லு கருப்பட்டி', 'சில நேரங்களில் சில மனிதர்கள்' போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர். அதன் பின்னர் 'குட்நைட்', 'லவ்வர்', 'குடும்பஸ்தன்' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
தற்போது, இவர் புதிய படங்களிலும் நடித்து வருகிறார். மணிகண்டன் நடிப்பையும் தாண்டி, பல நடிகர்கள், மற்றும் பிரபலங்களின் குரலில் 'மிமிக்ரி' செய்து அசத்தி வருகிறார். இவரது இந்த 'மிமிக்ரி' கலைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள்.

இதுகுறித்து மணிகண்டன் கூறும்போது, "அங்கீகாரம்தான் ஒவ்வொரு கலைஞனுக்கும் தேவை. அது கிடைக்காவிட்டால், எந்த கலைஞனும் முழுமை பெறமுடியாது. 'மிமிக்ரி' என்பது கடினமான விஷயம். 
அதன் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருவது பெருமை. பல நடிகர்களின் குரலை எடுத்து வருவதால், என் குரலே எனக்கு சில சமயங்களில் மறந்து போகிறது. மேடை நிகழ்ச்சிகளில் என் குரலில் பேசவே சிரமப்பட்டு போகிறேன். அந்தளவு என் குரலையே இழந்து வருகிறேன்.
இந்த இடத்துக்கெல்லாம் வருவேன் என்று எதிர்பார்த்தீர்களா? என்று என்னை கேட்கிறார்கள். ஆமாம், எதிர்பார்த்தேன் தான். எல்லாருக்கும் ஷாருக்கான் போல ஆகவேண்டும் என்று ஆசைதான். ஆனால் அவர் போல ஆவதற்கு என்ன செய்யவேண்டும்? என்பதில்தான் விஷயம் இருக்கிறது, என்று கூறியுள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       I find it difficult to speak in my own voice on stage due to mimicry Due to this I am losing my voice Actor Manikandan is sad