'குட் பேட் அக்லி' படத்திற்கு நல்ல வரவேற்பு; திரை காட்சிகள் அதிகரிப்பு..! 
                                    
                                    
                                   Good Bad Ugly receives good reception Screenings increase
 
                                 
                               
                                
                                      
                                            ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் 'குட் பேட் அக்லி'. படம் வெளியாகி தமிழகத்தில் முதல் நாளில் ரூ. 30.9 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 
அத்துடன், உலகளவில் 02 நாட்களில் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.  இனிவரும் நாட்கள் வாரவிடுமுறை தினங்கள் என்பதால் படத்தின் வசூல் மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரியா வாரியர், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 
 தமிழ்நாடு முழுவதும் சுமார் 1,000-க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியான இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதேப்போல் படம் வெளியாகி முதல் நாளில் நல்ல வசூலை ஈட்டியுள்ளது.
இந்த நிலையில், சென்னை உள்பட பல நகரங்களில் 'குட் பேட் அக்லி' படத்திற்கான திரைகள் மற்றும் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவு நேரக் காட்சிகளும் ஹவுஸ்புல்லாக இருப்பதால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் மிக லாபகரமான படமாக 'குட் பேட் அக்லி' இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
                                     
                                 
                   
                       English Summary
                       Good Bad Ugly receives good reception Screenings increase