நீலசட்டை மாறனின் விமர்சனத்திற்காக காத்திருக்கும் இயக்குநர் - அய்யய்யோ அவரா? பயங்கரமான ஆளாச்சே! - Seithipunal
Seithipunal


பிரேமம் படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கியுள்ள படம் 'கோல்டு'. இந்த திரைடபத்திற்கு, பிரபல திரை விமர்சகர் நீலசட்டை மாறன் என்ன விமர்சனம் செய்ய போகிறார் என்று காத்திருப்பதாக இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் தெரிவித்துள்ளார்.

'நேரம்' திடைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், மலையாள படமான 'கோல்டு' படத்தை இயக்கி தமிழக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

நல்ல வரவேற்பை பெற்ற பிரேமம் படம் வெளியாகி 7 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் அல்போன்ஸ் இயக்கிய படம் 'கோல்டு'. மலையாள உச்ச நட்சத்திரம் பிருத்விராஜ், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உள்ளிட்ட மலையாள நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.  

பிருத்விராஜ் புரொடக்சன்ஸ், மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன இந்த படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைக்க, ஆனந்த் சி சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

கடந்த 1ஆம் தேதி மலையாளத்திலும், 2ஆம் தேதி தமிழிலும் திரையரங்கில் படம் வெளியாகிய நிலையில், படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத்தொடங்கியது. 

படம் குறித்து கடுமையான விமர்சனம் செய்யும் நெட்டிசன்களை, தேடி தேடி பதிலடி கொடுத்து வருகிறார் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன். அய்யய்யோ அவரா? பயங்கரமான ஆளாச்சே! என்று சொல்லும் அளவுக்கு அவரின் பதில்கள் தெரிகின்றன.

இந்நிலையில், மணீஷ் நாராயணன், பரத்வாஜ் ரங்கன், ப்ளுசட்டை மாறன் ஆகியோரின் விமர்சனங்களுக்கு காத்திருக்கிறேன் என்று, இயக்குநர் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், தன்னுடைய உழைப்பிற்கு இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன் என்று அந்த பதிவில் இயக்குநர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gold movie review bule sattai maran


கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?Advertisement

கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?
Seithipunal