''கோட்'' படத்தில் விஜயகாந்த்: புதிய அப்டேட் கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்.! - Seithipunal
Seithipunal


வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 68வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு ''கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு சமீபத்தில் அறிவித்திருந்தது. 

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு செய்யறிவு மூலம் கோட் திரைப்படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தை பிரதான பாத்திரத்தில் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியானது. 

இந்த தகவலை பிரேமலதா விஜயகாந்த் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது, 

இயக்குனர் வெங்கட் பிரபு ஏஐ மூலம் கோட் திரைப்படத்தில் விஜயகாந்த் தோன்ற வைப்பது குறித்து அனுமதி கேட்டு 5 அல்லது 6 முறை எங்களது வீட்டிற்கு வந்துள்ளார். எனது மகன் சண்முக பாண்டியன் இடமும் இது தொடர்பாக பேசியிருந்தார். 

நடிகர் விஜய்யும் தேர்தலுக்கு பிறகு என்னை சந்திப்பதாக தெரிவித்திருக்கிறார். விஜயகாந்த்திற்கு எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் விஜய் மீது நல்ல மரியாதை உண்டு. எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் 17 திரைப்படங்களில் நடித்துள்ளார். 

அது போல் வெங்கட் பிரபு சிறுவயதில் இருந்தே எனக்கு தெரியும். அதனால் உனக்கும் விஜய்க்கும் என்னால் நோ சொல்ல முடியாது என வெங்கட் பிரபுவிடம் தெரிவித்தேன் என்றார். இதன் மூலம் கோட் திரைப்படத்தில் விஜயகாந்த் பிரதான கதாபாத்திரத்தில் தோன்ற இருப்பது உறுதியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Goat movie update


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->