கமலுக்கு பேரனாக இந்த படத்தில் நடித்தாரா அல்லு அர்ஜுன்.?!  ஆச்சர்யத்தில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய சினிமாவில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருப்பவர்  உலகநாயகன் கமல்ஹாசன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர் நடன இயக்குனர் இயக்குனர் பாடலாசிரியர் என சினிமாவில் இவர் எல்லா துறைகளிலும் கலக்கி வருபவர்.

தற்போது சங்கரின் இயக்கத்தில்  இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் திரைப்படத்தின்  இரண்டாம் பதிப்பாகும். இதற்கான சூட்டிங் தற்போது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்கயிருக்கிறார் கமல்ஹாசன். இதனைப் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகிறது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களைக் கொண்டு பான் இந்தியா சினிமாவாக உருவாக இருக்கிறது.

இந்நிலையில் 1985 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படத்திலிருந்து ஒரு புகைப்படம்  தற்போது வைரலாகி இருக்கிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகராக இருக்கும் அல்லு அர்ஜுன்  1985 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சிற்பிக்குள் முத்து திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். கமலுக்கு பேரனாக  அந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் அல்லு அர்ஜுன். இந்தப் புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில்  ட்ரெண்டிங்கில் இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous telugu actor played as a child artist in kamal hassan blockbuster movie photos now viral in social media


கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?Advertisement

கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?
Seithipunal