விமானத்தில் பாலியல் அச்சுறுத்தல்: பிரபல நடிகை பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


பிரபல மலையாள நடிகையான திவ்ய பிரபா தமிழில் 'கயல்', 'கோடியில் ஒருவன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தனக்கு விமானத்தில் பாலியல் அச்சுறுத்தல் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில், 'மும்பையில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் கொச்சிக்கு சென்று கொண்டிருந்தபோது 12c இருக்கையில் மது அருந்திவிட்டு அமர்ந்திருந்த ஒரு நபர் 12b இருக்கையில் தனது அருகில் அமர்ந்து கொண்டு காரணமே இல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தவறாக நடந்து கொண்டார். 

இது குறித்து விமான பணி பெண்ணிடம் தெரிவித்த போது அவர் எனது இடத்தை மட்டுமே மாற்றிக் கொடுத்தார். எனக்கு தொல்லை கொடுத்தவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

மேலும் இது தொடர்பாக கொச்சி வந்தவுடன் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். கேரள போலீஸ் சாருக்கும் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளேன். 

இதுபோன்ற சம்பவத்தின் போது பயணிகளின் பாதுகாப்புக்கு  முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தண்டனை வழங்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous actress complaint


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->