எதிர்நீச்சலுக்கு எதிராக வந்த பிக்பாஸ் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


எதிர்நீச்சலுக்கு எதிராக வந்த பிக்பாஸ் - காரணம் என்ன?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘எதிர்நீச்சல்’ தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடரில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களைக் கொண்டது. 

இதில் நடித்து வந்த இயக்குநர் மாரிமுத்து சமீபத்தில் உயிரிழந்ததால், அதன் டிஆர்பி பாதித்துள்ளதாக சொல்லப்பட்டது. தற்போது அவரது கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் வேல ராமமூர்த்தி இணைந்துள்ளார். இந்த நேரத்தில், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஆரம்பமாகியுள்ளது. 

இதன் காரணமாக ’எதிர்நீச்சல்’ தொடரின் டிஆர்பிக்கு தொடர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் இரவு 9.30 மணிக்கு தான் ’எதிர்நீச்சல்’ தொடரும் ஒளிபரப்பாகி வந்தது.

இந்த நிலையில், சன்டிவியில் அதிரடியாக ’எதிர்நீச்சல்’ தொடரின் நேரத்தை மாற்றியுள்ளனர். அதாவது 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த அந்த எதிர்நீச்சல் தொடர் இனி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ethirneechal serial timing change


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->