ஒரேநாளில் கதையைக் கேட்டு ஒப்புகொண்ட படம் என்றால் அது இதான் - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.! - Seithipunal
Seithipunal


எஸ்.பி.சௌத்ரி தயாரிபில்,  'வத்திக்குச்சி' படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கிய திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. தமிழ் திரையுலகின்  நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். 

இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், இந்த மாதம் 11- ஆம் தேதியன்று வெளியாக இருக்கும் இந்த படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் எஸ்.பி. சௌத்ரி, கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் கின்ஸ்லின்,  உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

அப்போது, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது, ''கோவிட் தொற்று பாதிப்பிற்கு பிறகு, இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்தான் நான் கலந்து கொண்டிருக்கிறேன். இதுவே மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 'கனா' படத்தைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. 

இப்படத்தின் கதையை இயக்குநர் கின்ஸ்லின் கோவிட் தொற்றுக்கு முன்னர் என்னை சந்தித்து விவரித்தார். அபோது, கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இல்லை. ஏனென்றால் அது மிகுந்த பொறுப்புடன் கூடிய பணி. 

மேலும் அந்த நேரத்தில் ‘க / பெ ரணசிங்கம்’ படத்தை முடித்துவிட்டு நல்ல நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து மிக மெதுவாக திரைத்துறையில் பயணம் செய்யலாம் என்றுத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் இந்தப் படத்தின் கதையைக் கேட்டு ஒரே நாளில் இதில் நடிக்கலாம் என்றுத் தீர்மானித்தேன். என்னுடைய திரையுலக அனுபவத்தில் ஒரு கதையைக் கேட்ட உடனே நடிப்பதற்கு ஒப்புக்கொண்ட முதல் திரைப்படம் இதுதான்.

இதையடுத்து, படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் இயக்குநர் கதையின் சூழலையும், காட்சியின் சூழலையும் எளிதாக விவரித்ததால் சவாலான காட்சிகளில் கூட மிகச் சரியாக நடிக்க முடிந்தது. இந்தப் படத்தில் என்னுடைய நடிப்புத் திறன் ரசிகர்களால் பாராட்டப்பட்டால் அதற்கான முழு புகழும் படத்தின் இயக்குநரையே சாரும்.‌ 'வத்திக்குச்சி' படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்கத்திற்கு திரும்பியிருக்கும் இயக்குநர் கின்ஸ்லினுக்கு இந்த படம் மிகப்பெரிய பாராட்டையும், வெற்றியையும் நல்ல வரவேற்பையும் அளிக்கும். 

கரோனா தொற்று காலகட்டத்தில் எனது நடிப்பில் உருவான மூன்று திரைப்படங்களும் டிஜிட்டல் தளங்களில் தான் வெளியானது. ஆனால் இந்தப் படத்தைப் மிக பொறுமையுடன் காத்திருந்து திரையரங்குகளில் வெளியிடுவதற்காக இருந்த இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.பி. சௌத்ரி அவர்களுக்கு இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரும்பாலும் குறைந்த பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருவது குறைந்துவிட்டது. அதிலும் டிஜிட்டல் தளங்களின் ஆதிக்கத்திற்குப் பிறகு மிகவும் குறைந்து விட்டது. ஆனால் குறைந்த பட்ஜெட்டாக இருந்தாலும் ஒரு படம் வித்தியாசமானதாகவும், தரமானதாகவும் இருந்தால் அதற்கான ஆதரவு ரசிகர்களிடையே குறையவில்லை. 'டிரைவர் ஜமுனா' அந்த வகையிலானப் படம் என்பதால் மிகுந்த நம்பிக்கையுடன் நவம்பர் பதினொன்றாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

வழக்கமாக எனக்கு கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். அதிலும் நான் மிக வேகமாகக் கார் ஓட்டுவேன். அதனால் இந்தப்படத்தில் சண்டை பயிற்சி இயக்குநர் அனல் அரசிடம் அனைத்து சண்டை காட்சிகளிலும், சாகசக் காட்சிகளிலும் டூப் போடாமல் நானே நடிக்கிறேன் என்று வாக்குறுதி அளித்தேன். 

ஆனால், இந்தப் படத்தில் லாரியுடன் நேருக்கு நேர் மோதும் ஒரே ஒரு காட்சியில் வரும் சிறிய பகுதியைத் தவிர படம் முழுவதும் அனைத்து சண்டை காட்சிகளிலும்,  நானே காரை ஓட்டினேன். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் நெடுஞ்சாலைகளில் நடைபெற்றதனால், ஒரு மறக்க இயலாத அனுபவமாகவும் இருந்தது. இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று பார்த்து ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என்று  கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

driver jamuna movie press meet aishwarya rajesh speach


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->