பிக் பாஸ் தமிழ் சீசன் 9 டைட்டில் வின்னர் ஆனார் திவ்யா கணேஷ்! டிராபியோடு அவர் அள்ளிச் சென்ற பரிசுகள் என்னென்ன? - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் அதிக வாக்குகளைப் பெற்று, டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 9 ஆண்டுகளாக தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன், ஆரம்பத்தில் சற்றே மந்தமாக இருந்தாலும், பின்னர் ரசிகர்களை கட்டிப்போடும் வகையில் பரபரப்பாக நகர்ந்தது.

2017-ம் ஆண்டு தொடங்கிய பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அவருக்குப் பிறகு, 8-வது சீசனிலிருந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அவர் தொகுத்து வழங்கிய இரண்டாவது சீசன் இதுவாகும்.

இந்த சீசனில் நந்தினி, பிரவீன் காந்தி, ஆதிரை, அப்சரா, கலையரசன், பிரவீன் ராஜ், துஷார், திவாகர், பிரஜன், வியானா, பார்வதி, கம்ருதீன், சாண்ட்ரா, கானா வினோத், ரம்யா ஜோ, கெமி, கனி, எஃப்.ஜே., சுபிக்‌ஷா, சபரி, விக்கல்ஸ் விக்ரம், அரோரா, திவ்யா கணேஷ் உள்ளிட்ட 24 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் திவ்யா கணேஷ், சபரி, விக்கல்ஸ் விக்ரம் மற்றும் அரோரா ஆகியோர் பைனலுக்கு முன்னேறினர்.

இறுதிப்போட்டியில் நான்காவது இடத்தை அரோரா கைப்பற்றினார். மூன்றாவது இடம் விக்கல்ஸ் விக்ரமுக்கு கிடைத்தது. இறுதியாக சபரி மற்றும் திவ்யா கணேஷ் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், மக்களின் அதிக வாக்குகளைப் பெற்ற திவ்யா கணேஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதன்மூலம், பிக் பாஸ் வரலாற்றில் டைட்டில் வென்ற இரண்டாவது வைல்டு கார்டு போட்டியாளர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் சீசன் 7-ல் அர்ச்சனா இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

டைட்டில் வின்னராக திவ்யா கணேஷுக்கு டிராபி வழங்கப்பட்டதுடன், ரூ.50 லட்சம் ரொக்க பரிசும் அளிக்கப்பட்டது. மேலும், இந்த சீசனில் அதிக சம்பளம் பெற்ற போட்டியாளரும் திவ்யாவே. அவருக்கு ஒரு நாளுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், 77 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கியதற்காக ரூ.23 லட்சத்துக்கும் மேல் சம்பளம் பெற்றுள்ளார். இதன் மூலம் மொத்தமாக சுமார் ரூ.73 லட்சத்துக்கும் அதிகமான தொகையை அவர் இந்த சீசன் மூலம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்குடன், மாருதி விக்டோரிஸ் என்ற சொகுசு காரும் பரிசாக வழங்கப்பட்டது.

வைல்டு கார்டு எண்ட்ரியாக 28-வது நாளில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த திவ்யா, வந்த முதல் வாரத்திலேயே வீட்டுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆரம்பத்தில் சில சர்ச்சைகள் காரணமாக பின்னடைவை சந்தித்தாலும், பின்னர் தனது விளையாட்டை மாற்றி, டிக்கெட் டூ பினாலே உள்ளிட்ட முக்கிய டாஸ்குகளில் தைரியமாக விளையாடி ரசிகர்களின் ஆதரவை பெற்றார். குறிப்பாக கார் டாஸ்கின் போது பார்வதி மற்றும் கம்ருதீனை எதிர்த்து அவர் காட்டிய ஆட்டம், மக்கள் மத்தியில் அவருக்கு பெரிய ஆதரவை பெற்றுத் தந்தது.

இந்த வெற்றியின் மூலம் திவ்யா கணேஷ், சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வரை புதிய வாய்ப்புகளை பெறுவார் என்றும், இனி சினிமாவில் ஹீரோயினாகவும் ரவுண்டு வருவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Divya Ganesh became the title winner of Bigg Boss Tamil Season 9 What prizes did she take away with the trophy


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->