விஜய் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் வேணாமா? வைரலாகும் வெங்கட் பிரபுவின் போஸ்ட்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்த திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் 2வது பாடல் நாளை மாலை வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. அதன் படி இப்பாடல் இன்று வெளியானது.

இந்த நிலையில், 'கோட்' படத்தின் புதிய அப்டேட்டை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'தளபதி விஜய் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் வேணாமா?. அனைவரையும் இரவு 12.01க்கு சந்திக்கிறோம்', என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director vengat prabhu twitter post viral


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->