நடிகர் விஜய்க்கு எதிராக பிரபல இயக்குனர்.! பரபரப்பு பேட்டி..கொந்தளிக்கும் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


சில நாட்களுக்கு முன்பு பிரபல நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதுகுறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்தர் கருத்துக்களை தெரிவித்தார். அதுமட்டுமின்றி ரஜினிக்கு எதிராக தர்பார் விஷயத்தில் ஒரு சில கருத்துக்களையும் தெரிவித்தார்.

இந்த கருத்துக்கள் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த டி ராஜேந்தர் மறைமுகமாக திடீரென விஜய்யை தாக்கும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்து இருக்கின்றார். 

அந்த கருத்தில், "வருமான வரி சோதனைக்கு ஆளானவர்கள் தங்களின் கை சுத்தமாக தான் இருக்கிறது என்பதை பொதுமக்களிடம் தெரிவித்து இருக்கலாமே? சினிமாத்துறையில் அரசியல் குறித்துப் பேசுபவர்கள் அனைத்தையும் சந்திக்க வேண்டியது அவசியமானது." என்று தெரிவித்துள்ளார்.

இப்படி மறைமுகமாக விஜயை டி ராஜேந்தர் தாக்கி கருத்து கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆனாலும், ஒரு சிலர் அவர் விஜய்யை மனதில் வைத்துக்கொண்டு இதனை தெரிவிக்கவில்லை. பொதுவாகத்தான் தெரிவித்தார். என்று விளக்கம் அளிக்கின்றனர். இருப்பினும் விஜய் ரசிகர்கள் டி ராஜேந்தர் மீது மிகுந்த கோபத்தில் இருப்பதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director speech about vijay


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal