நான் இந்து அல்ல.. ஆனால் இதை பின்பற்றுவேன்.. விளக்கமளித்த இயக்குனர் ராஜமௌலி.! - Seithipunal
Seithipunal


பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலி இந்து மதத்திற்கும், இந்து தர்மத்திற்கும் உள்ள வித்தியாசத்தை கூறியுள்ளார்.

சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியது. இந்த படம் வெளியானதிலிருந்து அதில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் இந்து மதம் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ராஜமவுலி இந்து மதம் குறித்து பேசியுள்ளார். அப்பொழுது பேசிய அவர்;

இந்து மதம் மற்றும் இந்து தர்மத்திற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. என்னுடைய திரைப்படம் ஆர்ஆர்ஆர் இந்து நூல்களுடன் தொடர்புடைய கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. குறிப்பாக மைய கதாபாத்திரங்கள் இந்து கடவுள்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. 

பலர் அது இந்து மதம் என்று நினைக்கின்றனர். இந்து மதம் தற்போதைய சூழ்நிலையில் தான் உள்ளது. ஆனால், இந்து மதத்திற்கு முன் இந்து மத தர்மம் இருந்தது. இது ஒரு வாழ்க்கை முறை. இது அன்று தத்துவம் நீங்கள் மதத்தை எடுத்துக் கொண்டால் நானும் இந்து அல்ல ஆனால் தர்மத்தை எடுத்துக் கொண்டால் நான் மிகவும் இந்து. 

இந்த படத்தில் நான் சித்தரிப்பது உண்மையில் பல நூற்றாண்டுகள் மற்றும் யுகங்களாக இருக்கும் வாழ்க்கை முறையை தான். வாழ்க்கையை எப்படி பார்ப்பது நீங்கள் செய்யும் செயலின் பலனை பார்ப்பது அல்ல அதை தான் இந்து தர்மம் கூறுகிறது. அதனால் நான் இந்து தர்மத்தை பின்பற்றுபவன் என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Rajamouli speech hindhu religion


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->