திரௌபதி குறித்து ஒற்றை வார்த்தையில் மோசமாக பேசிய இயக்குனர் நவீன் முகமது அலி.. தக்க பதிலடி கொடுத்த ரசிகர்கள்..!  - Seithipunal
Seithipunal


ழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் இயக்கத்தில் தயாரிப்பாளர் இல்லாத கிரவுட் ஃபண்டிங் என்ற முறையில் உருவாக்கப்பட்டுள்ள படம்தான் திரௌபதி. இந்த படமானது சமூகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் நாடக காதல் குறித்து மிகவும் எதார்த்தமான கதையுடன் களம் இறங்குகிறது திரௌபதி. இந்தப்படத்தின் ட்ரைலர் ஜனவரி 3 இல் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட ஐந்து மணி நேரங்களில் தமிழகம் முழுவதும் சர்ச்சையை கிளப்பியது.

இளைஞர்களை சுயலாபத்திற்காக மூளைச்சலவை செய்து பெண்களுக்கு எதிராக நாடக காதல் நிகழ்த்த செய்கின்றனர் என்று கூறுவதை காண இயலும். முழு படம் வெளியானால் மட்டும்தான் இந்த படம் குறித்த சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க இயலும்.இந்நிலையில், பல்வேறு தரப்பினரும் படத்தின் மீது வழக்கு தொடுப்பதாகவும், படக்குழுவினருக்கு மறைமுகமாக மிரட்டல் விடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றது.

திரௌபதி,

காதல் என்ற பெயரில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மற்றும் வசதி வாய்ந்த பெண்களிடம் ஆசையாக பேசி அவர்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி வீட்டை விட்டு அழைத்து சென்று அதன் பிறகு, அவர்களது பெற்றோர்களிடம் உங்கள் பொண்ணு எங்க கிட்ட தான் இருக்கு, பணம் கொடுத்துவிட்டு கூட்டிக்கொண்டு போ.. என்று மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை பற்றி பலருக்கும் தெரியப்போவதில்லை. பெண்ணை அழைத்து வந்தது போல அப்படியே கொடுத்தால் ஒரு தொகை, கர்ப்பமாக்கி கொடுத்தால் ஒரு தொகை என்று இந்த கும்பலின் அட்டூழியத்திற்கு அளவில்லாமல் செல்கிறது. 

இது குறித்து அந்த பெண்ணின் பெற்றோர்கள் போலீஸிடம் தெரிவிக்கலாம் என்று பார்த்தால், அந்த பெண்ணோ நான் விரும்பி தான் இவன் கூட வந்தேன் என்று சொல்லும். அந்த அளவுக்கு அந்த பெண்ணை மூளைச்சலவை செய்திருப்பார்கள்.

அப்படி அந்த பெண்ணின் பெற்றோர்கள் பணம் கொடுக்க மறுத்து, போலீஸ் , கோர்ட் என்று சென்றால், அந்த பெண்ணை கொலை செய்து விட்டு அந்த பழியை அவரது பெற்றோர் மீது போட்டு ஆணவ கொலை செய்துவிட்டார்கள் என்று திருப்பி விடும் சம்பவங்களும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இதை பற்றியெல்லாம் தெரியாத பெண்கள் ஆசை வார்த்தையில் மயங்கி, மதிகெட்டு அவர்கள் பின் சென்று சீரழிந்து வருகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது அந்த பெண்ணும், பெண்ணின் பெற்றோர்களும் தான். 

திரௌபதி,

இதை பற்றி வெளியே சொன்னால் குடும்பம் மானம் பறி போய்விடும் என்று குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் இருக்கிறது. இப்படியெல்லாம் நடக்குமா.? என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் இது தான் அப்பட்டமான உண்மை. 

இதையெல்லாம் பெண்களுக்கும், பெண்ணை பெற்றவர்களுக்கும் தோலுரித்து காட்டும் வகையில் உருவான படம் தான் திரௌபதி. இந்த படத்தில் ட்ரைலர் வெளியான அடுத்த நொடியில் இருந்தே பற்றி எரிய தொடங்கி விட்டது. இது குறித்து பல தரப்பில் இருந்து பல விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. பலபேரை ஆட்டம் காண வைத்து விட்டால் திரௌபதி. 

இந்த நிலையில், மூடர் கூடம், கொளஞ்சி போன்ற படங்களை இயக்கிய நவீன் முகமது அலி தனது ட்விட்டரில் இந்த படத்தின் கதை பற்றியும், அதற்கு பின்னால் இருக்கும் உண்மை பற்றியும் ஒன்றும் தெரியாமல் ஒரே வார்த்தையில் 'குப்பை' என விமரிசித்து இருக்கிறார்.

ட்விட்டரில் ஒரு நபர் திரௌபதி படம் பற்றி கருத்து கேட்டதற்கு "குப்பை குறித்து கருத்து சொல்லனுமா" என கேட்டுள்ளார். இதை பார்த்த பலரும் அவருக்கு பதிலடி அளிக்கும் விதத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள். 

ஒரு படத்தை பற்றி அறியாமல் அதன் பின்னணி என்னவென்று தெரியாமல் இது போன்ற கருத்துக்களை தெரிவிக்கும் இவர்களது புத்தி தான் குப்பைகள் நிறைந்தது என்று தான் சொல்ல வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

director naveen ali about drowpathy


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->