திரௌபதி மோகனின் அடுத்த படம்! வெளியானது டைட்டில்!  - Seithipunal
Seithipunal


2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில், வெற்றிகரமாக ஓடிய திரைப்படத்தில் திரௌபதி மிக முக்கியமான படமாகும். ட்ரெயிலர்லயே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியத்துடன், பல சர்ச்சைகளை கடந்து பல்வேறு விமர்சனங்களுடன் இந்த படம் வெளியானது. மிகவும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படமானது மக்களின் பெரும் ஆதரவுடன் வியாபார ரீதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தினை பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குநர் மோகன் G இயக்கியிருந்தார். இந்த படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் ரிஷி  நடித்திருந்தார். இவர்கள் இருவரும் இணையும் அடுத்த படத்தின் தலைப்பானது இன்று (ஆயுத பூஜை) வெளியிடப்படும் என முன்பே இயக்குனர் மோகன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை படத்திற்கான அலுவலக பூஜையையும் மோகன்ஜி மற்றும் நடிகர் ரிச்சர்ட் ரிஷி கலந்து கொள்ள நடத்தினர். இதனையடுத்து இன்று காலை 11 மணி 32 நிமிடத்திற்கு இப்படத்திற்கான தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு "ருத்ர தாண்டவம்" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தலைப்பை சொல்லும் போஸ்டரில் பல குறியீடுகள் இருப்பதால், இந்த திரைப்படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Mohan G announced his next project tittle


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
Seithipunal