த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை: மீண்டும் சர்ச்சையை கிளப்பிய மன்சூர் அலிகான்! - Seithipunal
Seithipunal


நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து பேசிய சர்ச்சை கருத்துக்கு திரைத்துறையில் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. 

இதனால் தேசிய மகளிர் ஆணையம் கடந்த 20ஆம் தேதி மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு பரிந்துரை செய்தது. 

அதன் அடிப்படையில் மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர். 

கடந்த 23 ஆம் தேதி விசாரணைக்காக சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார். இதனை தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான், 'எனது சக திரைநாயகி திரிஷா மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம் வரும்போது நான் ஆசீர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக.. ஆமீன்!' என அறிக்கை வாயிலாக மன்னிப்பு கேட்டார். 

இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி ஒன்றில் பேசியபோது, நான் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை என சர்ச்சையை கிளப்பியுள்ளார். 

அதாவது, எனது பிஆர்ஓவிடம் மரணித்துவிடு என தெரிவிந்தேன் அவர் தவறாக புரிந்து கொண்டு மன்னித்துவிடு என எழுதிவிட்டார். 

அந்த சமயத்தில் பிரச்சனையை வளர்க்க வேண்டாம் என நினைத்து அதனை அமைதியாக விட்டுவிட்டேன் என தெரிவித்துள்ளார். இது மக்களிடையே மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Did not apologize to Trisha Mansoor Alikhan 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->