விரைவில் தர்மதுரை "2" அப்டேட் வெளியிட தயாரிப்பாளர்.! இயக்குனர் குறித்த தகவல் சீக்ரெட்.!  - Seithipunal
Seithipunal


சீனுராமசாமி தயாரிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற தர்மதுரை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக ஆர்.கே.சுரேஷ் தெரிவித்திருக்கிறார். 

நடிகர் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகியோர் நடித்து சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாக்கிய திரைப்படம்தான் தர்மதுரை. இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியாகியது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக பணியாற்றிய இந்த திரைப்படத்தை சுகுமார் ஒளிப்பதிவு செய்து இருப்பார். 

ஆர்கே சுரேஷ் தயாரிப்பில் வெளியாகிய தர்மதுரை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், "விரைவில் தர்மதுரை 2" என்று அப்டேட் வெளியிட்டுள்ளார். ஆனால், இந்த திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகைகள் குறித்த விவரத்தை அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dharmadurai 2 update


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!
Seithipunal