வாவ்.. தனுஷின் அடுத்த படத்தில்.. கைகோர்க்கும் திரிஷா.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரைப்பட துறையில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். அதனை தொடர்ந்து தனது திறமையான நடிப்பினால் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். 

ஆரம்பம் முதலே சிறந்த நடிப்பை வழங்கி ரசிகர்களை கவர்ந்தவர். ஆடுகளம், புதுப்பேட்டை, வட சென்னை, அசுரன், கர்ணன் என அவரின் நடிப்பு நன்முறையில் அனைவராலும் கவரும் அளவிற்கு இருக்கிறது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். 

அடுத்ததாக தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அருள் மாதேஸ்வரன் இயக்குகிறார். இதில் நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கின்றார்.  இதில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார்.

இந்த படத்துக்கு பின் தனுஷின் 50வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷே இந்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நீண்டநாள் பேச்சுவார்த்தைக்கு பின் திரிஷாவை இப்படத்தில் நடிக்கவைக்க படக்குழு சம்மதிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush pair with thrisha


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->