தனுஷ் ‘D55’ல் டபுள் ஹீரோயின்ஸ் சர்ப்ரைஸ்… சாய் பல்லவி இணைந்ததால் எதிர்பார்ப்பு உச்சம்...! - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி முதன்முறையாக கை கோர்க்கும் புதிய திரைப்படம் தற்போது D55 என்ற தற்காலிக பெயரில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் ஸ்டுடியோஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது.

பெரிய திரை அனுபவத்தை தரும் வகையில், இந்த திரைப்படத்தை முழுக்க முழுக்க அதிரடி மற்றும் ஆக்ஷன் நிறைந்த விறுவிறுப்பான கதையாக வடிவமைக்க ராஜ்குமார் பெரியசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரசிகர்களை சீட் எட்ஜில் வைத்திருக்கும் மாஸ் காட்சிகளுடன் படம் உருவாகும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இணைந்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் உயர்ந்துள்ளது.

இதனுடன், தனுஷுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார் என்பதையும் படக்குழு போஸ்டர் மூலம் உறுதிப்படுத்தியது.அதனைத் தொடர்ந்து, மேலும் ஒரு முக்கிய அப்டேட்டாக, நடிகை சாய் பல்லவியும் D55 படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு புகைப்படத்துடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் படத்தின் நட்சத்திர பட்டியல் மேலும் வலுப்பெற்று, ரசிகர்களின் எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dhanush D55 features double heroine surprise inclusion Sai Pallavi heightened expectations


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->