சிம்புவுக்கு கல்யாணம் இப்படித்தான் நடக்கும் - கூல் சுரேஷ் மீனாட்சியம்மன் கோவிலில் பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக இருந்து இன்றைய எஸ்.டி
ஆராக வளர்ந்து இருப்பவர் சிம்பு. இவரது நடிப்பில் தற்போது வெளியாக இருக்கும் திரைப்படம் பத்து தல. இத்திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 

இந்தத் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருக்கிறார். சில தினங்களுக்கு முன் வெளியான இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் சிம்புவின் தீவிரமான ரசிகரும் அவரது நண்பருமான  திரைப்பட நடிகர் கூல் சுரேஷ் பத்து தல திரைப்படம் வெற்றி பெற வேண்டி  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்தி 108 தேங்காய்களை உடைத்திருக்கிறார். 

வழிபாட்டிற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கூல் சுரேஷ் சிம்புவின் பத்து தல திரைப்படம் வெற்றி பெற வேண்டி மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்தி 108 தேங்காய் உடைத்ததாக தெரிவித்தார்.

அந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும் என தெரிவித்த அவர் தனது வழக்கமான பாணியில், "எஸ்.டி.ஆரின் பத்து தல சிம்பு ரசிகர்கள் எல்லாம் கெத்து தல." என தனது வழக்கமான பஞ்ச் டயலாக்கை பேசி ரசிகர்களையும், பத்திரிகையாளர்களையும் உற்சாகமூட்டினார்.

சிம்புவின் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்த கூல் சுரேஷ் சிம்புவின் திருமணம் நிச்சயமாக பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு முன்னிலையில் தான் நடைபெறும் என தெரிவித்தார். அப்படியாகவே டி.ராஜேந்தர் அவர்கள் சிம்புவை பொறுப்புடன் வளர்த்துள்ளார் எனவும் தெரிவித்தார். சிம்புவின் திருமண விருந்தில் நாம் அனைவரும் சந்திப்போம் எனவும்  உற்சாகத்துடன் பதிலளித்தார் கூல் சுரேஷ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cool suresh talks about pathu thala and simbu marriage during his visit to meenakshi amman temple


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->