அடுத்த சோகம்.. நகைச்சுவை நடிகர் விஸ்வேஷ்வர ராவ் மரணம்.. கண்ணீரில் திரை உலகம்.!! - Seithipunal
Seithipunal


நகைச்சுவை நடிகர் சேஷு மற்றும் வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தது தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது நகைச்சுவை நடிகர் விஷ்வேஸ்வர ராவ் உயிரிழந்திருப்பது வெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட விஸ்வேஸ்வரராவ் தனது ஆறாவது வயதிலிருந்து நடிக்க தொடங்கி இதுவரை 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

இவர் முதலில் தொலைக்காட்சிகளில் தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது 62 வயதாகும் விஷாவேஸ்வர ராவ் உடல் நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார். அவரது உடல் சிறுசேரியில் உள்ள இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலைக்காக வைக்கப்பட்டுள்ளது. விஸ்வேஸ்வராவுக்கான இறுதி சடங்கு நாளை நடைபெறும் என குடும்பத்தார் அறிவித்துள்ளனர். அடுத்தடுத்து திரைத்துறையில் நிகழும் மரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Comedy actor vishveshvara Rao passed away


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?
Seithipunal
--> -->