நடிகர் பெயரில் மோசடி - பிரபல நடிகை மீது போலீசில் புகார்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில், ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்த 'தனுசு ராசி நேயர்களே' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் திகங்கனா சூர்யவன்ஷி. இந்தியில் பிரபல நடிகையாக இருக்கும் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

தற்போது 'இவர் ஷோ ஸ்டாப்பர்' என்ற வெப் தொடரில் ஜீனத் அமனுடன் நடித்துள்ளனர். இந்த நிலையில், நடிகை திகங்கனா சூர்யவன்ஷி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து இந்த தொடரை இயக்கிய மணீஷ் ஹரி சங்கர் தெரிவித்ததாவது:-

''ஷோ ஸ்டாப்பர் வெப் தொடர் படப்பிடிப்பில் திகங்கனா பங்கேற்று நடித்தபோது எனக்கு சல்மான்கான், ஷாருக்கான், அக்சய்குமார் உள்ளிட்டோரை தனிப்பட்ட முறையில் தெரியும் என்று தயாரிப்பாளரிடமும், என்னிடமும் கூறினார். வெப் தொடரை வெளியிட அக்சய்குமாரிடம் பேசுவதாகவும், இதற்காக தனக்கு 75 லட்சம் ரூபாயும் அக்சய்குமார் பெயரில் ரூ.6 கோடியும் தரவேண்டும் என்று கேட்டார்.

அக்சய் குமாரிடம் காண்பிக்க வேண்டும் என்று சொல்லி வெப் தொடரின் முழு எபிசோடும் இருந்த ஐபேடை வாங்கி சென்றார். இதுவரை அதை திருப்பி தரவில்லை. அதை வைத்து எங்களிடம் பணம் பறிக்க முயற்சிக்கிறார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளோம்'' என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

case against actor digangana suryavanshi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->