விஜயின் குரலில் போலியான ஆடியோ! பதறிப் போன புஸ்ஸி ஆனந்த் விளக்கம்! - Seithipunal
Seithipunal


நடிகர் சித்தார்த் நடித்து அண்மையில் வெளியான சித்தா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சித்தா படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சித்தார்த் பெங்களூர் சென்றார்.

அங்கு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நடிகர் சித்தார்த் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த கன்னட ரக்‌ஷா வேதிகா அமைப்பினர் காவிரி விவகாரம் தொடர்பாக கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்ததால் நடிகர் சித்தார்த் பாதியில் வெளியேறினார்.

இந்த நிலையில் "தமிழ்நாட்டு விவசாயிகளை அழிக்க நினைக்கும் கர்நாடகாவில் இப்போது நடந்து கொண்டிருக்கும் காவிரி பிரச்சினை காரணமாகவும் நடிகர் சித்தார்த்தைத் தாக்கிய கன்னட அமைப்பினருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் என் லியோ படத்தை நான் கர்நாடகாவில் திரையிடப் போவதில்லை. இதனை கர்நாடகா மீண்டும் மீண்டும் செய்யும் பட்சத்தில் 2026-ல் மிகப்பெரிய விளைவை சந்திக்க நேரிடும்" என நடிகர் விஜய் பேசியதாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

இதற்கு நடிகர் விஜய் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. விஜய் குரலில் சமூக வலைதளத்தில் பரவி வரும் ஆடியோ போலியானது என விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் விஜய் பேசுவதாக வீடியோவை பதிவிட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bussy Anand described Vijay voice audio is fake


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?




Seithipunal
-->