'காலமே காலமே என்னை எங்கு கொண்டு போகிறாய்'-  பாடியவருக்கே மரணதுதி பாடும் நிலை.!  - Seithipunal
Seithipunal


சமீபகாலமாக திரைத்துறையில் இருக்கும் நிறைய பிரபலங்கள் இளம் வயதிலேயே உயிரிழந்து வருகின்றனர். அதுவும் அனைத்தும் எதிர்பாராத திடீர் மரணங்களாகவே நிகழ்கிறது. 

இத்தகைய நிலையில், பிரபல தமிழ் பாடகரான பம்பா பாக்யா (வயது 49) இன்று திடீரென உயிரிழந்துள்ளார். தமிழ் சினிமாவில் சர்கார் படத்தின் 'சிம்ட்டாங்காரன்', 2.0 படத்தின் 'புள்ளினங்காள்' பிகில் படத்தின் 'காலமே', பொன்னியின் செல்வன் படத்தில் 'பொன்னி நதி' உள்ளிட்ட சூப்பர்ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ளார்.

தற்போது இவரது மரணம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. பம்பா பாக்யா பாடிய, "

காலமே காலமே

என்னை எங்கு கொண்டு போகிறாய்

மன்னவன் சாகிறான்

கைகள் கட்டி பார்க்கிறாய்

." என்ற பாடலை தான் யார் மறைந்தாலும் பதிவிட்டு இரங்கல் தெரிவிப்பார்கள்.  

இப்பொழுது, இந்த பாடலை பாடியவருக்கே, இப்பாடலை பதிவிட்டு ரசிகர்கள் இரங்கல் சொல்ல வேண்டிய சோக நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் இந்த பாடலை இவருக்கே இவ்வளவு விரைவில் போடும் நிலை ஏற்படும் என்று ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bombay Bakya song lyrics make felt sad


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->