பிக்பாஸில் பிசியானதால், கண்டுகொள்ளாத ரசிகர்கள்.! கடுப்பான ஓவியா வெளியிட்ட போட்டோ.!
biggboss oviya photo
களவாணி திரைப்படம் மூலம் நடிகை ஒவியா முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரது முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றது. அவரை பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக்கியது. குறிப்பாக ஓவியாவுக்கு குழந்தை ரசிகர்கள் அதிகம். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகைகள் வரிசையில் இடம்பிடித்தார்.

அதன் பின்னர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்த ஓவியா தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு நிகரில்லா இடத்தை பிடித்தார். இதை தொடர்ந்து சில தமிழ் படங்களில் ஓவியா நடித்தார். ஆனால், அந்த படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை என்றே கூற வேண்டும்.
இதன் காரணமாக ஓவியாவின் மார்க்கெட் சரிய ஆரம்பிக்கவே, பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓவியாவின் குழந்தை தனமான சேட்டைகள் மற்றும் விஷயங்களுக்கு ரசிகர்கள் அதிகமாகினர். ஓவியா ஆர்மி உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் பிக்பாஸ் வீட்டிலேயே இவர் காதல் கொண்டு அதில் தோல்வியும் கண்டார்.

அடுத்து பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஓவியா, சில படங்களில் நடித்த போதிலும், தொடர்ச்சியாக விளம்பரங்கள் மற்றும் வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் என படுபிஸியாக இருக்கின்றார். இப்படிப்பட்ட சூழலில் நடிகை ஓவியா சமீபத்தில் நடைபெற்ற விழாவில் தான் புடவை அணிந்து கலந்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை கவரும் வண்ணம் இருப்பதால் தற்போது வைரலாகி வருகின்றது.